Kamayagoundanpatti Town Panchayat

Town Profile

  1. Kamayagoundanpatti Town Panchayat Located 40.00 K.M distance from Theni District.
  2. Nearest Railway Station Name : Madurai , This Railway Station Located 120.00 k.m Distance from kamayagoundanpatti
  3. Nearest Airport Located in : Madurai
  4. Bus Route Details : : Theni To Cumbum Cumbum To Kamayagoundanpatti
  1. Perumal Temple - Ward No : 14 - Street Name - SuruliRoad
  2. Karumariamman Temple - Ward No : 13 - Street Name - Karumaripuram
Festival Name How many Days Celebrated Which Month Celebrated No of Peoples ParticipatedNotified/Non Notified
Karumariamman Temple Festival3MAR7500NON-NOTIFIED
Nearest City Name Direction Distance from Town Panchayat
-East0.00 K.m
CumbumWest3.00 K.m
TheniNorth40.00 K.m
-South0.00 K.m

 தேனிமாவட்டம்,காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி

பெயர் காரணம்.

                  கி.பி.16ம் நூற்றாண்டில் உருவானது இந்த காமயகவுண்டன்பட்டி.  மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் ஆட்சிக்குட்பட்ட ஒரு கம்பனூர் என்கிற கம்பத்தில்  கம்ப ராயத்தேவன் என்கிற குறுநில மன்னரின் ஆட்சிக்குட்பட்ட  பகுதியில் இருந்தது இந்த ஊர் . ஊரின் தென் கிழக்கு பகுதியில் கூத்தனாட்சி ஆறு என்கிற பெரிய ஆறு ஒன்று இருக்கிறது. இதன் கரையோரத்தில் தான் முதன்முதலில் ஊர் இருந்ததாக பெரியோர்கள் கூறுகிறார்கள்.  அதற்கு சாட்சியாக அங்கே முதுமக்கள் தாழியும் சுட்ட செங்கல் கற்களான இடிபாடுடைய சுவர்கள் இன்றும் இருக்கின்றன.  கூத்தனாட்சியம்மன் கோயில் என்ற கோயில் உள்ளது. 

                       பிற்காலத்தில் வடக்கே பூசாரி கவுண்டன்பட்டியிலிருந்து பெரியோர்களால் மரியாதையாக பாட்டையா என்று அழைக்கப்படுகிற காமய கவுண்டர் தனது கால்நடைகளை பூசாரி கவுண்டன்பட்டியிலிருந்து சுருளி தீர்த்ததிற்கு மேய்சலுக்கு அழைத்து வந்தார்.  வந்தவரின் பார்வையில் ஊரின் மேற்கே பெரிய ஓடை என்கின்ற பெரிய ஆறு ஓடிக்கொண்டு இருந்தது. இதன் கரையோரத்தில் ஊர் உருவானால் கால்நடைகளுக்கு தண்ணீரும், மனிதர்களுக்கு விவசாயம் செய்ய தண்ணீரும் கிடைக்கும் என்று நினைத்து இப்பொழுது உள்ள இந்த காமயகவுண்டன்பட்டி என்கிற ஊரை உருவாக்கினார் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.  அதற்கு சாட்சியாக பாட்டையாவின் சாமாதியை கோயில் கட்டி பாட்டையா கோவில் என்று அழைக்கப்பட்டு ஊர் பொதுமக்கள் அனைவரும் வணங்கி வருகிறார்கள்.  

            எனவே ஊரை உருவாக்கிய காமயகவுண்டர்  நினைவாக இந்த ஊருக்கு காமயகவுண்டன்பட்டி என்று பெயர் வந்தது.

 

 ஊரின் சிறப்பு

 

1. பாட்டையா கோவில் 

                  பாட்டையா என்கிற  காமயகவுண்டர் இவரின் பெயர்தான் ஊரின் பெயரானது.  அதற்கு மரியாதை செய்யும் வகையில்தான் ஊரின் வடக்கே அவருக்கு கோயில் கட்டி பொதுமக்கள் அனைவரும் வணங்கி வருகிறார்கள்.

 

2. பெரியாறு 

 

         ஊரின் மேற்கே பெரிய ஆறு என்கிற முல்லை பெரியாறு ஓடிக் கொண்டு இருகிறது. இதன் தண்ணீர்தான் இந்த பகுதி மக்களுக்கு தண்ணீர், மற்றும் வாழ்வாதாரத்திற்கு உரியது.

 

ஊரின் தொழில்வளம்



                        இந்த  ஊரின் தொழில் என்றால் பிரதானமானது  விவசாயம்தான். குறிப்பாக பன்னீர்  திராட்சை என்கிற கருப்புதிராட்சை பழ விவசாயமும் , நெல் விவசாயமும், தென்னை விவசாயமும் முக்கியமானது.

1 திராட்சை விவசாயம்

                        திராட்சை விவசாயத்தை எடுத்துக்கொண்டால் ஊரின் முக்கால் பங்கு விளைநிலங்களில் திராட்சை தான் பயிரிடப்பட்டுள்ளது.  கிட்டதட்ட 500லிருந்து 600 ஏக்கர் வரை இருக்கும், இந்த திராட்சை  பழங்கள் வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  நாள் ஒன்றுக்கு சுமார் 20டன் திராட்சை பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும்.  இந்த திராட்சை தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். கிட்டத்தட்ட  2500லிருந்து 2800 வரை இந்த தொழிலாளர்கள்இருக்கிறார்கள்.  இவர்கள் சங்கம் அமைத்து ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். இந்த திராட்சை தொழிலை நம்பி இந்த 1300 பேரின் குடும்பங்களும் உள்ளன. மிகவலுவான விவசாயம் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

 

2. நெல் விவசாயம்

                        நெல் விவசாயம் ஊரின் மேற்கு பகுதியில் பெரியாற்றின் கரையோரத்தில் முழுக்க நெல்விவசாயம் தான் 300ஏக்கர் வரை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அறுவடை காலங்களில் மட்டுமே அதிக ஆட்கள் தேவைப்படும். இது ஊரின் முக்கிய விவசாயம் ஆகும்.

 

3. தென்னைவிவசாயம்

                        தென்னை விவசாயம் ஊரின் அனைத்து பக்கங்களிலும் தென்னந்தோப்புகள் உள்ளன.  40 நாட்களுக்கு ஒரு முறை காய் பறிக்க வேண்டும்.  தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் இருக்கின்றனர்.  இவர்களுக்கு மிகச்சிறந்த வேலை வாய்ப்பினை உருவாக்கி உள்ளது. இந்த தென்னை விவசாயம்.

 

4. கல்குவாரிகள்

                        ஊரின்  கிழக்கு பகுதியில் கல்குவாரிகள் உள்ளன. இந்த சுற்றுபுற ஊர்களுக்கு வீடுகட்ட  மற்றும் அனைத்து கட்டுமான பணிக்கு தேவையான அனைத்து  கற்களோ, சாலைகளுக்கு தேவையான ஜல்லி கற்களே இங்கு தவிர வேறு எங்கும் கிடையாது. இந்த கல்குவாரி தொழிலை நம்பி 300 தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த கல்குவாரியை சுற்றி கல் உடைக்கும் கிரஸ்சர்கள் உள்ளன. இதில் சுமார் 100 தொழிலாளர்கள் உள்ளனர்.