Veerapandi Town Panchayat

Town Profile

  1. Veerapandi Town Panchayat Located 4.00 K.M distance from Theni District.
  2. Nearest Railway Station Name : Theni Allinagaram , This Railway Station Located 6.00 k.m Distance from veerapandi
  3. Nearest Airport Located in : Madurai
  4. Bus Route Details : : 75
  1. GOW MARIYAMMAN KOVIL, VEERAPANDI - Ward No : 15 - Street Name - SANNATHI STREET
  2. KANNEESWARAMUDAIYAR KOVIL, VEERAPANDI - Ward No : 15 - Street Name - SANNATHI STREET
  3. THATCHANAMOORTHI KOVIL, CHATHTHIRAPATTI - Ward No : 7 - Street Name - CHATHTHIRAPATTI MAIN ROAD
Festival Name How many Days Celebrated Which Month Celebrated No of Peoples ParticipatedNotified/Non Notified
CHITTIRAI FESTIVAL8MAY1000000NOTIFIED
Nearest City Name Direction Distance from Town Panchayat
THENIEast6.00 K.m
BODINAYAKANURWest15.00 K.m
THENINorth5.00 K.m
CHINNAMANURSouth0.00 K.m


வீரபாண்டி பேரூராட்சி

அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில்

தல வரலாறு

                வைகை நதியின் கரையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அசுரன் ஒருவனை செல்வதற்காக சக்திதேவியின் அம்சமான கௌமாரி ஒரு சிவலிங்கம் செய்து அதன்முன் தவமியற்றி வந்தார். இதையறிந்த அசுரன் கௌமாரி தூக்கிச் செல்ல முயன்றான். 

                இதையறிந்த அசுரன் கௌமாரியைத் தூக்கிச் செல்ல முயன்றான். இதைத் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌமாரி அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அவனை நோக்கி வீசினாள். அந்த அருகம்புல் முக்கழுப்படையாக உருவெடுத்து அசுரனை இரண்டாகப் பிளந்து கொன்றது. இதைப் பார்த்த தேவர்கள் வானிலிருந்து மலர்களைத் தூவினர். அவள் பூஜித்து வந்த சிவலிங்கத்திற்கு "திருக்கண்ணீசுவரர்" எனப் பெயரிட்டாள். மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய சிவபெருமான் வீரபாண்டியில் தவமிருக்கும் கௌமாரியம்மனை வணங்கி அதன்பிறகு கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான்.

சித்திரைத் திருவிழா

            இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்மனிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்டவர்கள் அக்கினிச் சட்டி எடுத்து காணிக்கை செலுத்துகின்றனர்.


சிறப்புக்கள்

            பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கின்றனர். கோயிலின் தீர்த்தமாக கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது. கோயில் குறித்த தகவல்கள் சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது. கோயில் கோபுரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரது உருவச் சிலைகள் கோபுரத்தில் இடம் பெற்றுள்ளன.