Azhagappapuram is a first grade Town Panchayat comes under Kanyakumari District administration. It is situated as 13th Kilometer on the Nagercoil - Anjugramam road (Via - Vazhukkamparai). Through this Town Panchayat Vazhukkamparai - Anjugramam state highways road is connected by NH-7 and NH-47. The area of the town panchayat is 8.63 sq.Km.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் முதல்நிலை பேரூராட்சியானது 8.63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 9626 ஆகும். மற்றும் தற்போதைய நடப்பு மக்கள் தொகை கணக்கீட்டின் படி 10700 ஆகும். இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சியில் மொத்தம் 3282 குடியிருப்புகள் உள்ளன. இப்பேரூராட்சியில் 11 ஆழ்துளை கிணறு மற்றும் 3 திறந்த வெளி கிணறு உள்ளடக்கிய உள்ளுர் திட்டம் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. மேற்படி குடிநீர் திட்டங்களிலிருந்து 900 வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் 326 பொது குடிநீர் குழாய்கள் மூலமாக நகரில் 71 எல்.பி.சி.டி. குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 25 தள்ளுவண்டிகள் மூலம் அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பேரூராட்சிக்கு சொந்தமான 2 லோடுஆட்டோக்கள் மூலம் வளன்நகர் வளமீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
What's New
Town Information
City Name: | Azhagappapuram Town Panchayat |
Area in SqKm | 8.630 |
District | Kanyakumari |
Taluk | Agasteeswaram |
Name of Assembly Constituency | Kanyakumari |
Name of Parliment Constituency | Kanyakumai |
No of Wards | 15 |
No of Streets | 43 |
2011 Population | 9626 |
Present Population | 10700 |