The Chinnakkampalayam Town Panchayat is Located in Tiruppur District which is Urban Local Body coming under the purview of Directorate of Town Panchayats, Chennai, Government of Tamil Nadu. As per the Classifications, this is Second Grade Town panchayat and Total population of this Local Body is 11546 with an extent of 32.30 Sq.km There are 15 Wards and 12 Nos. of Habitations. The Chinnakkampalayam Town Panchayat has Three revenue village namely Chinnakkampalayam,Selampalayam and Kangayampalayam. Town Panchayat office is located at Dharapuram to Udumalai State Highways Road, Chinnakkampalayam Panchayat Office Phone Number is 04258 - 255223 and panchayat email ID is chinnakampalayamtp@yahoo.in Agricultural and Sugarcane is major activity of town. Nearly 80% to 90% of the population is engaged in agricultural.
சின்னக்காம்பாளையம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் தெற்கு எல்லையில் தாராபுரம்-உடுமலை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேற்கில் 24 கி.மீ. தூரத்தில் உடுமலை நகரமும், கிழக்கில் 25 கி.மீ. தூரத்தில் தாராபுரம் நகரமும், வடக்கில் 24 கி.மீ. தூரத்தில் குண்டடமும் , தெற்கில் 35கி.மீ. தூரத்தில் பழனி நகரமும் இதனைச் சுற்றி அமைந்துள்ளது.2011ம் ஆண்டு கணக்கீட்டின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 11546 பேர் ஆகும் இதில் ஆண்கள் 5772 மற்றும் பெண்கள் 5774 பேர்கள் ஆகும். ஆதிதிராவிடர் மக்கள்தொகை 3131 ஆகும். பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 32.30ச.கி.மீ. காங்கயம்பாளையம், செலாம்பாளையம் மற்றும் சின்னக்காம்பாளையம் ஆகிய மூன்று வருவாய் கிராமங்கள் இப்பேரூராட்சியில் அடங்கியுள்ளன. 12 குக்கிராமங்களையும் இப்பேரூராட்சி கொண்டுள்ளது. பேரூராட்சியின் எல்லைக்குள் அஞ்சலகம், தொலைபேசி அலுவலகம் ஆகிய மத்திய அரசு அலுவலகங்களும் உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நூலகம் ஆகியவையும், கல்வி வசதிக்காக உயர்நிலைப் பள்ளி இரண்டும், நடுநிலைப் பள்ளி மூன்றும், ஆறு ஆரம்பப்பள்ளிகளும் உள்ளது. இப்பேரூராட்சியைச் சுற்றிலும் சுமார் 16 கி.மீ. தூரத்திற்குள் கரும்பு மற்றும் நெல் ஆகியவைகளின் உற்பத்தி மிகவும் அதிக அளவில் உள்ளது. இப்பேரூராட்சி பகுதி முழுவதும் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. மேலும் காவிரிக் கூட்டு குடிநீர் திட்டத்தின்மூலமும் இப்பேரூராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இப்பேரூராட்சியில் மொத்தம் 23 மகளிர் சுய உதவிக்குழுக்கள் நல்லமுறையில் இயங்கிவருகின்றன. சின்னக்காம்பாளையம் பேரூராட்சி பகுதியில் சோமனூத்தில் மாரியம்மன்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்து பெற்றது.
What's New
Town Information
City Name: | Chinnakkam palayam Town Panchayat |
Area in SqKm | 32.300 |
District | TIRUPPUR |
Taluk | DHARAPURAM |
Name of Assembly Constituency | DHARAPURAM |
Name of Parliment Constituency | ERODE |
No of Wards | 15 |
No of Streets | 58 |
2011 Population | |
Present Population |