The Kannivadi Town Panchayat is Located in Tiruppur District which is Urban Local Body coming under the purview of Directorate of Town Panchayats, Chennai, Government of Tamil Nadu. As per the Classifications, this is Selection Grade Town panchayat and Total population of this Loacal Body is 4385 with an extent of 24.65 Sq.km There are 12 Wards and 40 Nos. of Habitations. The Kannivadi Town Panchayat has One revenue village namely Kannivadi . Town Panchayat office is located at Karur to Dharapuram Road, Kannivadi Panchayat Office Phone Number is 04202 - 225261 and panchayat email ID is kannivaditp@yahoo.com Agricultural is major activity of town. Nearly 60% to 70% of the population are engaged in agricultural. Sheep forming of the Area.
கன்னிவாடி பேரூராட்சி திருப்பூர் மாவட்டத்தின் தென் கிழக்கு எல்லையில் தாராபுரம் - கரூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேற்கில் 32 கி.மீ. தொலைவில் தாராபுரம் நகரமும், கிழக்கில் 43 கி.மீ. தொலைவில் கரூர் நகரமும் அமைந்துள்ளது. கன்னிவாடி பேரூராட்சியின் மொத்தப் பரப்பளவு 24.65 ச.கி.மீ. இப்பேரூராட்சி பகுதி முழுவதும் உள்ள பொதுமக்கள் விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பை முழுநேர தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் முருங்கைக்காய் இந்திய அளவில் பிரசித்தி பெற்றதாகும். இப்பகுதி பொதுமக்களால் கால்நடைகள் ஆடு மற்றும் மாடுகள் மிக அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இப்பேரூராட்சியில் வாரச்சந்தை ஒன்று அமைந்துள்ளது. இங்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை கூடும் வாரச் சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வரும். கன்னிவாடி பேரூராட்சி சந்தை திருப்பூர் மாவட்ட அளவில் ஆடு விற்பனையில் மிகப் பெரிய சந்தையாகும். இங்கு ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் மணலூரில் அமராவதி ஆற்றின் ஓரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்லாண்டி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாதம் யுகாதிப் பண்டிகை மிகவும் சிறப்பான முறையில் இத்திருத்தலத்தில் நடைபெறும். கன்னிவாடி பேரூராட்சியின் மக்கள் தொகை 2011ம் வருட கணக்கெடுப்பின்படி 4385 பேர்கள் ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் அரசுமேல்நிலைப்பள்ளி ஒன்றும், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிகள் 6ம் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தமிழ்நாடு மின்சாரவாரிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம், துணை அஞ்சலகம், தொலைபேசி அலுவலகம், துணை கால்நடை மருந்தகம், கனரா வங்கி, மற்றும் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கி ஆகிய அரசு அலுவலகங்கள் அமையப்பெற்றுள்ளன.
Town Information
City Name: | Kannivadi Town Panchayat |
Area in SqKm | 24.65 |
District | TIRUPUR |
Taluk | DHARAPURAM |
Name of Assembly Constituency | DHARAPURAM |
Name of Parliment Constituency | ERODE |
No of Wards | 12 |
No of Streets | 40 |
2011 Population | |
Present Population |