
Keelapavoor Town Panchayat
கீழப்பாவூருக்கு வரலாற்றில் பாகூர் ஆண சத்திரிய சிகாமணி நல்லூர் என்றும் பெயருண்டு. பெரிய குளத்திற்கு நீர் வரும் சிற்றாற்று சித்திர வாய்க்காலுக்கு வீர ராஜேந்திரன் வாய்க்கால் என்றும் ஒரு பெயருண்டு. இன்று வழங்கி வரும் கீழப்பாவூர் வரலாற்றில் மிகப் பழமையான ஒன்று ராஜ ராஜ சோழன் வழி வந்த சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருகபாலீஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்) இங்கு உள்ளது. இந்த ஆலயம் 11ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுப்பப்பட்டது. இவ்வாலயம் அருகில் முனை எதிர் மோகர்கள் (போர் முனையில் ஆர்வம் கொண்டவர்கள்) கோட்டை உள்ளது. இதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. மேலும் முன்காலத்தில் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் மூலம் பாகு காய்த்து பனை வெல்லம் தயாரித்து இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் குடியிருந்து வந்ததால் இப்பகுதியை பாகு காய்த்ததால் பாகூர் என கூறி நாளடையில் பாவூர் என மாறி இரண்டு பகுதியாக இருந்ததால் கீழப்பாவூர் மற்றும் மேலப்பாவூர் என இரண்டு ஊர்களாக பிரித்து அதிக மக்கள் தொகையை கொண்ட கீழப்பாவூர் பேரூராட்சியாக உருவானது. நரசிங்கமூர்த்தி மேற்கு நோக்கி இருப்பதால் கேரள மாநிலம் மாவலிக்கரா கிராமத்தில் முன்னொரு காலத்தில் தீப்பற்றி எரிந்ததாகவும் கடவுள் மாவலிக்கரா மகாராஜாவிடம் கனவில் தோன்றி கிழக்கே கீழப்பாவூர் இருக்கும் நரசிங்கமூர்த்தி பார்வை இருப்பதால் அங்கு சென்று திருப்பணி செய்து கோவில் முன் தெப்பம் அமைத்து கொடுக்குமாறு அருள் புரிந்ததற்கிணங்க கேரள மகாராஜா இக்கோவிலில் திருப்பணி செய்து வெட்டிக் கொடுத்ததாக கல்வெட்டுகள் உள்ளது.
What's New
Town Information
City Name: | Keelappavoor Town Panchayat |
Area in SqKm | 14.180 |
District | Tenkasi |
Taluk | Alankulam |
Name of Assembly Constituency | Alankulam |
Name of Parliment Constituency | Tirunelveli |
No of Wards | 18 |
No of Streets | 136 |
2011 Population | 22231 |
Present Population | 24465 |