Rayagiri is situated about 10 Kms from the Western Ghats. A river originates from this ghats reaches Rajasingaperi and Kulasekaraperi Lakes. Kadamankulam, Melabananthi, Kizhabananthi, and Melakarisalkulam Lakes get water from the Rajasingaperi lake for irrigation. A village is named Ullar where the river runs through it. Rayagiri consists of smaller villages or hamlets such as southchathiram, Vadugapatti, Melakariselkulam. The Zamindar of sivagiri ruled it before Independence Before that, Rayars ruled this Land. Theis military ammunitions and weapons were kept in a place called Thalavaipuram this place was also called Mannarmalai as there were kings and many kills. Still now we find some archaeological evidences in the wells to the west of Rayagiri that those kings lived here and their generation must have perished due to some natural calamity. Rayagiri is called so in memory of the rayagiri kings. It was a village Panchayat in 1958. In 1973 this Panchayat ruled according to the opinions of one particular community in the 13 the ward consisting of 600 voters. In 1961 ut acquired the status of Town Panchayat consisting 15 wards and the hamlets southchathiram, Vadugapatti, Melakarisalkulam and Avudaiapuram there were 6 Elementary schools and one High school in this Panchayat from 1937 to 1947 Now there are 6 Elementary schools one higher secondary school one high school for girls an Electricity Board office, a library and primary health centre. People in ancient time’s cultivated puddy, millet maize and groundnuts now they cultivate paddy cotton and sugarcane above 8000 people form 12,000 people depend on agriculture people worship Sri Mari Amman and Sri Kali Amman in theist respective temples which are at the heart of the town. Thought people of all communities live here 99.9% people are Hindus. To the west of this town about 3 kms away can find the Madurai – Shenkottai National Highway road (No.208) which passes through Ullar. Rani Mankammal Salai Passes through Rayagiri. People who adhere to tradition still like to call this town Mannarmalai.
இராயகிரி பேரூராட்சி மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.மேற்படி மலையிலிருந்து தோன்றிய ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம் மற்றும் மேலக்கரிசல்குளம் போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது. மேற்படி மலையிலிருந்து வரும் நீர் ஊரின் நடுவே செல்வதால் அவ்விடத்திற்கு உள்ளார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் சிவகிரி ஜமீந்தாரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அதற்கு முன் இராயர்கள் என்ற குரு நில மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். அவர்கள் தளவடங்கள் வைத்திருந்த பகுதி தளவாய்புரம் என்றும் மன்னர்கள் வாழ்ந்த பகுதி என்பதாலும் சுற்றி மலைகள் நிறைந்த பகுதியாக இருந்ததாலும் இவ்வூர் மன்னர் மலை என்று அழைக்கப்பட்டு வந்தது. இவ்வூரின் மேற்கே இராயர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றும் இவ்வூருக்கு மேற்கே அமைந்துள்ள கிணறுகளில் அப்போது வாழ்ந்த மக்களின் கல்வெட்டுகளைக் காணலாம். அவர்கள் வாழ்க்கைக்குப் பின் அவர்களின் நினைவாக இவ்வூர் இராயகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1958 இல் கிராம பஞ்சாயத்து அந்தஸ்து பெற்று வந்த இக்கிராமம் 1961 முதல் 13 வார்டுகளுடன் தெற்குசத்திரம், வடுகபட்டி, மேலகரிசல்குளம், தளவய்புரம் மற்றும் உள்ளர் ஆகிய குக்கிராமங்களை உள்ளடக்கிய பேரூராட்சியாக இயங்கி வந்தது.1973 ஆம் ஆண்டு குறிப்பிட்ட இன மக்களின் வேண்டுகோலின் படி 13 வது வார்டு மட்டும் உள்ளார் தளவாய் புரம் என்ற தனி கிராம பஞ்சாயத்தாக பிரிந்தது. தற்போது தெற்குசத்திரம், வடுகபட்டி, மேலகரிசல்குளம் ஆகிய குக்கிராமங்களை உள்ளடக்கிய 15 வார்டுகள் கொண்ட பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆரம்பகாலத்தில் 6 துவக்கப்பள்ளியும், ஒரு உயர்துவக்கப் பள்ளியும் கொண்ட இப்பேரூராட்சி தற்போது மேனிலைப்பள்ளி ஒன்றும், பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஒன்றும், துவக்கப்பள்ளி ஒன்பதும், மின்சரவரியம், நூலகம், ஆரம்பசுகாதார நிலையம் போன்றவற்றை உள்ளடக்கியது. முன்னர் இவ்வூர் மக்கள் நெல்,கம்பு,சோளம்,கடலை போன்றவற்றை பயிர் செய்தனர்.தற்போது நெல் பருத்தி,கரும்பு போன்றவற்றை பயிர் செய்து வருகின்றனர்.சுமார் 12,000 த்திற்கு மேல் வசிப்பவர்களில் 8000 த்திற்கும் அதிகமானவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறர்கள்.இவ்வூர் நடுவே 1947 க்கு பின் ஸ்ரீமரியம்மன், காளியம்மன் கோவில்கள் கட்டப்பட்டு வழிபட்டு வருகிறார்கள். இராயகிரிலிருந்து மேற்கே 3 கி.மீ தொலைவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் (நெ.எண் 208) உள்ளார் என்ற இடத்தில் இணைகிறது. இராணி மங்கம்மள் சாலை இராயகிரியின் நடுவே செல்கிறது.
What's New
Town Information
City Name: | Rayagiri Town Panchayat |
Area in SqKm | 8.500 |
District | Tirunelveli |
Taluk | Sivagiri |
Name of Assembly Constituency | Vasudevanallur |
Name of Parliment Constituency | Tenkasi |
No of Wards | 15 |
No of Streets | 61 |
2011 Population | 11223 |
Present Population | 11784 |