Sivagiri a Selection Grade Town Panchayat is situated in Tirunelveli District, Sivagiri Taluk at Madurai – Kollam Nation Highway No.208. Western Ghat Mountain is situated 8 km from this town . Sivagiri is on the banks of River. Sivagiri is surrounded by paddy fields and full of fragrant spread from the wind flown from Western Ghats. The Total Population of 23040 in Sivagiri Town Panchayat . Sivan has taken this Western Ghat as his abode He blesses this town from this Giri (Western Ghat Mountain) So this town has come to be named after Sivan and Giri , Sivagiri. Son of Sivan, Murugan, Husband of Valli has made this mountain his abode and blesses the people as sri Bala Subramaniya Swamy. This town is so fertile with Red Paddy and Sugar cane. This town has been ruled well by the Zamins. This town is a standing example for Secularism and Unitarianism.
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தேர்வுநிலைப் பேரூராட்சி மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச் 208இல் அமைந்துள்ள ஒரு நகரமாகும். சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பசுமை நிறைந்த பகுதியாகும். இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 47 சதுர கி.மீ. ஆகும். இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சியாகும். திருநெல்வேலியிலிருந்து சுமார் 105 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ள. திருநெல்வேலி மாவட்டத்தின் வடகடைசி ஊராக இப்பேரூராட்சி அமைந்துள்ளது. சிவகிரி பேரூராட்சி மொத்தம் 23040 மக்கள் தொகை கொண்டதாகும். சிவகிரி பேரூராட்சி ஒரு தாலுகா தலைநகரமாக விளங்குகிறது மற்றும் இவ்வூரில் அரசு மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனை, பொதுப்பணி துறை, அஞ்சல் அலுவலகம், நீதிமன்றம், காவநிலையம், வனத்துறை அலுவலகம், மின்வாரிய அலுவலகம், கருவூலம், சார்பதிவாளா மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ளன. சிவகிரி பேரூராட்சியை சுற்றியுள்ள கிராம மக்கள் பொருட்கள் வாங்கவும், விற்கவும் மற்றும் வேறு ஊருகளுக்கு செல்வதற்காகவும் இப்பேரூராட்சிக்கு தினசரி சுமார் 1000இக்கும் மேற்ப்ட்ட மக்கள் வந்து சென்று பயனடைகின்றனர். மேலும் சிவபெருமாள் (சிவன்) இவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து அருள்பாவித்ததால் இவ்வூருக்கு சிவகிரி என பெயர் வந்தது. சிவன் பெற்ற புதல்வன் அருள்மிகு முருகப்பெருமாள் இவ்வூரின் வடபகுதி மலையில் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார். மேலும் இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவாக தேர்திருவிழா மற்றும் தெப்பத்திருவிழாவும், நடைபெறும். மாதந்தோறும் கார்த்திகை திருநாள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
What's New
Town Information
City Name: | Sivagiri Town Panchayat |
Area in SqKm | 47.000 |
District | Tirunelveli |
Taluk | Sivagiri |
Name of Assembly Constituency | Vasudevanallur |
Name of Parliment Constituency | Tenkasi |
No of Wards | 18 |
No of Streets | 103 |
2011 Population | 23040 |
Present Population | 24731 |