Tharangambadi, formerly Tranquebar, is a panchayat town in the Nagapattinam district of the Indian state of Tamil Nadu. It lies 15 kilometres (9.3 mi) north of Karaikal, near the mouth of a distributary of the Kaveri River. Tharangambadi is the headquarters of Tharangambadi taluk while its name means "place of the singing waves". It was a Danish colony from 1620 to 1845, and in Danish it is still known as Trankebar. The place dates back to 14th century. Masilamani nathar (Shiva) temple was built in 1306, in a land given byMaravarman Kulasekara Pandyan .
தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தரங்கம்பாடிக்கு, சிதம்பரம்-நாகப்பட்டினம், பொறையார்-மயிலாடுதுறை, மயிலாடுதுறை-நாகப்பட்டினம், காரைக்கால்-பொறையார் போன்ற பேருந்துகள் தரங்கம்பாடி வழியாகச் செல்கின்றன. தரங்கம்பாடி என்ற ஊர் பெயர் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. சங்க இலக்கியங்களான பொருநராற்றுப்படை, நற்றிணை, அகநானூறு தரங்கம்பாடியை பொறையாறு என்றேப் புகழ்கின்றது. கல்லாடனார் பொறையாற்றுக்கிழானைப் பாடும்போது (புறம்-391) பொறையாற்றை ஒரு துறைமுகப்பட்டினமாகவே(முன்துறை) குறிப்பிட்டுள்ளார். தரங்கம்பாடி கடற்கரை ஓரத்தில் மாசிலாமணிஸ்வரர் என்ற சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்தபின், மத்திய அரசு பார்வையில் டேனீஷ் கோட்டை இருந்தது. பின் தமிழக அரசின் ஆய்வு மாளிகையாக ஆக்கப்பட்டது. 1978ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் உள்ளது. அங்கு அருங்காட்சியம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஓவ்கிட் என்பவர் (கப்பல் படைத் தளபதி) தரங்கம்பாடி டேனிஷ் பர்க் கோட்டையை கட்டியவர் ஆவர். முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் தரங்கம்பாடி பேரூராட்சியில். தரங்கம்பாடி கடற்கரையில் மே, ஜுன், ஜூலை ஆகிய மாதங்களில் மிக ரம்மியமான கடற்காற்று (ஓசோன் காற்று) வீசுகிறது. இந்த ஓசோன் காற்றை சுவாசித்தால் நல்ல மருந்தாக விளங்குவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
What's New
Town Information
City Name: | Tharangampadi Town Panchayat |
Area in SqKm | 13.060 |
District | MAYILADUTHURAI |
Taluk | THARANGAMBADI |
Name of Assembly Constituency | POOMBUKHAR |
Name of Parliment Constituency | MAYILADUTHURAI |
No of Wards | 18 |
No of Streets | 172 |
2011 Population | 23191 |
Present Population | 25125 |