-
கிருஷ்ணகிாி மாவட்டம் நாகோஜனஅள்ளி இரண்டாம் நிலை பேரூராட்சியாக 1968 ஆம் ஆண்டு இரண்டாம்நிலை பேரூராட்சியாக துவக்கப்பட்டது. இப்பேரூராட்சியில் தந்தை பொியார் அவர்கள் துவக்கி வைக்கப்பட்ட அரசு மேலநிலைப் பள்ளி உள்ளது. இப்பேரூராட்சிக்குட்பட்ட என்.தட்டக்கல் கிராமத்தில் திப்புசுல்தான் கோட்டை உள்ளது. அதில் வவ்வால் மரம் என்று உள்ளது. எப்போது அதில் 1000 மேற்பட்ட வவ்வால் தொங்கி கொண்டு இருக்கும். இப்பேரூராட்சியிலிருந்து 8 கி.மீ தொலையில் சோழ ர் காலத்தில் கட்டப்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோம் இருப்பதால் பென்னேஸ்வரமடம் என்ற சிவன் கோவில் உள்ளது. அதில் மாதந்தோறும் பவுர்னமி அன்று பொது மக்கள் விரதம் இருந்து கிாிவலம் வருவார்கள். இப்பேரூராட்சியிலிருந்து வடக்குபுறம் சுமார் 5 கி.மீ தொலைவில் பொியமலை என்ற மலை உள்ளது. இதன் உயரம் சுமார் 5000 அடி ஆகும். இந்த மலையின் மீது பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் மந்தியில் மற்றும் கீழ்புறம் புண்ணிய தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்த்தில் குளித்தால் தோஷம் மற்றும் நொய் நொடி நீங்கும் என்று நம்பிக்கை உள்ளது. இந்த கோவில் புரட்டாசி மாதத்தில் மிகவும் சிறப்பு இருக்கும் மற்றும் வாரந்தோறும் சனிக்கிழமை நாட்களிலும் பொது மக்கள் வந்த பெருமாளை வணங்கி விட்டு செல்லுவார்கள். இந்த பேரூராட்சியில் தொழிற்சாலை ஏதுவும் இல்லை. இதுவே இப்பேரூராட்சியின் சிற்பபு அம்சாகும்.
Town Information
Town Panchayat Name: | Nagojanahalli |
Population | 10493 |
Area in SqKm | 14.870 |
District | Krishnagiri |
Taluk | Pochampalli |
Name of Assembly Constituency | Bargur |
Name of Parliment Constituency | Krishnagiri |
No of Wards | 15 |
No of Streets | 59 |