Panpoli Town Panchayat

Town Profile

  1. Panpoli Town Panchayat Located 10.00 K.M distance from Thenkasi District.
  2. Nearest Railway Station Name : Sengottai , This Railway Station Located 5.00 k.m Distance from panpoli
  3. Nearest Airport Located in : Trivandrum (Kerala)
  4. Bus Route Details : : Sengottai - Kadayanallur, Tenkasi - Tirunelveli
  1. Tirumalai Murugan Temple - Ward No : 14 - Street Name - Tirumalai Kovil Salai, Panpoli
Festival Name How many Days Celebrated Which Month Celebrated No of Peoples ParticipatedNotified/Non Notified
Vaigasi Visagam10MAY10000NON-NOTIFIED
Thaipoosam10JAN50000NON-NOTIFIED
Kanthasasty2NOV25000NON-NOTIFIED
Nearest City Name Direction Distance from Town Panchayat
TenkasiEast9.00 K.m
Western GhatsWest0.00 K.m
Kadayanallur North18.00 K.m
SengottaiSouth6.00 K.m

  
  பண்பொழி ஊராட்சியானது 01.11.1959 முதல் திருநெல்வேலி (தற்போது தென்காசி மாவட்டம்) தலஸ்தாபன மண்டல ஆய்வாளரின் 02.09.1959 ம் தேதி நக.எண் 4614/59 உத்திரவின்படி அமைக்கப்பட்டது. 20.09.1969 நாளிட்ட  சென்னை  ஊரக   வளர்ச்சி   இயக்குநர்   அவர்களின்  நக.எண் 85466/69 எப்-2 உத்திரவின் 01.10.1969 ல் முதல் இரண்டாம் நிலை பேரூராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அரசாணை எண் 150 நாள் 1.10.04 (ஊரக வளர்ச்சித் துறை) இன்படி 14.6.2004 முதல் சிறப்பு சிற்றூராட்சியாக செயல்பட்டு தற்போது அரசாணை எண் 55 நாள் 14.7.2006 ன் படி பேரூராட்சியாக செயல் பட்டு வருகிறது.

        தென்காசி மாவட்டம் (முன்னர் திருநெல்வேலி மாவட்டம்), செங்கோட்டை வட்டம் இயற்கை எழில் சிந்தும் பொதிகை மலை அடிவாரத்தில் பண்பொழி பேரூராட்சி பகுதி அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8.00 ச.கி.மீட்டர் மற்றும் மக்கள் தொகை சுமார் 9313 (2011 ம் வருட கணக்கெடுப்பின்படி) ஆகும். பண்பொழி இரண்டாம் நிலை பேரூராட்சி 1969 ம் ஆண்டு சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் அவர்களின் உத்திரவு எண் 85466/63/கு2, நாள் 1.10.1969 ல் பிரகடனம் செய்யப்பட்டது. ஊரைச் சுற்றி தென்னந்தோப்புகளும், வயல் வெளிகளும் நிறைந்து  காணப்படுகிறது.   இங்கு புகழ்பெற்ற திருமலைக்குமாரசுவாமி கோவில் உள்ளன. பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் தைப் பூச திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் அந்நாளில் அன்னதானம்  அறுசுவையுடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  ஆண்டுதோறும்  திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா நடத்தப்படுவது போல் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலிலும் வெகு சிறப்பாக சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.  பண்பொழியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு இரண்டு மாநிலங்களில் (தமிழ்நாடு மற்றும் கேரளா) புகழ் பெற்றுள்ள ஐயப்பன் கோவில் உள்ளது. 

மக்கள் தொகை (Source : http://www.census2011.co.in/)

மக்கள் தொகை

ஆண்

4692

பெண்

4621

மொத்தம்

9313

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்

ஆண்