கிணறுகள் தோண்டுவதற்கான மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள் (Regulation of Sinking of Wells and safety measures)

  • ஆழ்துளை கிணறு அமைக்கும் தனி நபர் அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவம் படிவம் "அ" (Form A) உடன் கட்டணமாக ரூ.100/-க்கான வங்கி வரைவோலையுடன் செயல் அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
  • விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாட்களுக்குள், செயல் அலுவலர் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து படிவம் "ஆ" வில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கலாம்.
  • செயல் அலுவலர் விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்ய முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் உரிய காரணங்களை எழுத்து மூலமாக விண்ணப்பதாரருக்கு விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்ப படிவத்தின் மாதிரி மற்றும் பிற விவரங்கள் கீழே கண்டுள்ள அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும்.