Pattiveeranpatti is located in 10.36 latitude and 77.98 longitude of dindigul district in Tamilnadu. Pattiveeranpatti Town Panchayat is one of the urban local body in sevugampatti revenue village with 2.59 sq km, which included survey nos from 339 to 589. This Town panchayat Local Body election 2016, Male 3328, Female-3559 and Total-6887 . This urban local body includes 3 hamlets viz., 1)Pattiveeranpatti, 2) Alagapuri & MGR Nagar and 3) Ramakrishnapuram. The Main Occupation of the people are Coconut agriculture and cattle breeding. The Main cultivation is coconut is plain area and coffee, cardamom, pepper, banana in Hills area viz., Thandikudi, Thadiyankudichi, Perumparai and Poolathur those lands are owned by landlords blong to pattiveeranpatti. The literacy rate in this town is somewhat higher when compared to nearby town in Dindigul District. There are two very eminent and popularly Private School namely NSVV Boys / Girls Hr sec School.
திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி அச்சரேகை 10,36 மற்றும் தீர்க்கரேகை 77.98ல் வத்தலக்குண்டு அய்யம்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பட்டிவீரன்பட்டி பேருராட்சியானது சேவுகம்பட்டி வருவாய் கிராமத்தில் 2.59 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் சர்வே எண்.339 முதல் 589 வரை அடங்கும். இப்பேருராட்சியின் 2016ம் ஆண்டின் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலின்படி மொத்த மக்கள் தொகை 6887, இதில் 3328 ஆண்களும் மற்றும் 3559 பெண்களும் அடங்குவர். இந்த பேருராட்சி 1.பட்டிவீரன்பட்டி, 2. அழகாபுரி மற்றும் எம்.ஜி.ஆர்.நகர், 3.ராமகிருஷ்ணாபுரம் ஆகிய 3 உட்கிடை கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியிலுள்ள முக்கிய தொழில் தென்னை விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் ஆகும். இப்பகுதிக்கு தாண்டிக்குடி,தடியன்குடிசை, பெரும்பாறை ஆகிய மலைப்பகுதிகளில் தென்னை, காப்பி, ஏலக்காய், மிளகு, வாழைப்பழம் ஆகியவை விளைவிக்கப்பட்டு இப்பேருராட்சி பகுதியில் கொண்டு வந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகின்றனர். மேலும், இப்பேருராட்சி பகுதிகளிலுள்ள மக்களின் கல்வி திறன் திண்டுக்கல் மாவட்டதிலுள்ள மற்ற பேருராட்சிகளைக் காட்டிலும் அதிக படிப்பறிவுள்ளவர்களாக உள்ளனர். மேலும், இப்பேருராட்சி அருகாமையில் உள்ள நா.சு.வி.வி.ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளி அமைந்துள்ளதே இப்பகுதியின் இரண்டாவது சிறப்பு ஆகும்.
Town Information
City Name: | Pattiveeranpatti Town Panchayat |
Area in SqKm | 2.590 |
District | Dindigul |
Taluk | Nilakottai |
Name of Assembly Constituency | Dindigul |
Name of Parliment Constituency | Nilakottai |
No of Wards | 15 |
No of Streets | 67 |
2011 Population | |
Present Population |